Header Ads


பிரதமரை சந்தித்த சோனியா

இந்தியாவுக்கு சென்றுள்ள  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை காங்கிஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
புதுடெல்லியில்  பிரதமர் தங்கியிருந்த விடுதியில் நேற்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சோனியா காந்தியுடன், ராகுல் காந்தி, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா ஆகியோரும்  பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக எந்தத் தகவல்களும் கசிய விடப்படவில்லை.
Powered by Blogger.