Header Ads


சரவணன் மீனாட்சி புகழ் ரியோ முதல் முறையாக சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 2வது படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

சரவணன் மீனாட்சி புகழ் ரியோ முதல் முறையாக சிவகார்த்திகேயன்தயாரிக்கும் 2வது படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். 

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிப்பைத் தொடர்ந்து பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளைக் கொண்டுள்ளார். சொந்தமாக தனது பெயரில் சிவகார்த்திகேயன் புரோடக்‌ஷன்ஸ் என்று தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். 

இந்நிறுவனத்தின் மூலம், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ள கனா படத்தை தயாரித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அருண்காமராஜ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து 2வது படத்திற்காக பூஜையை நேற்று தொடங்கியுள்ளார். ஆம், சிவகார்த்திகேயன் புரோடக்‌ஷன்ஸ் ன்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இதற்காக, பிளாக் ஷீப் யூடியூப் சேனலுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கான பட பூஜை நேற்று நடந்துள்ளது. ஸ்மைல் சேட்டை என்ற பெயரில் யூடியூப் ரசிகர்களை கவர்ந்த நிலையில், நேற்று முதல் பிளாக் ஷீப் யூடியூப் என்ற புதிய பெயருடன் அந்த சேனல் இயங்கி வருகிறது.
Powered by Blogger.