காமெடி நடிகரான யோகி பாபு, அட்லி இயக்கும் நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் நடிப்பில் தீபாவளியன்று வெளியான சர்கார் திரைப்படம்  ரசிகர்களின் பேராதரவைப் பெற்று, வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனைப் படைத்துள்ளது.
இதையடுத்து நடிகர் விஜய் மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்தாண்டு தீபாவளியன்று வெளியாக உள்ள இப்படத்திற்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விவேக் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியானது. இப்போது, விவேக்குடன் காமெடி நடிகர் யோகி பாபுவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே மெர்சல், சர்கார் உள்ளிட்ட படங்களில் யோகி பாபு நடித்திருக்கும் நிலையில், தளபதியுடன் அவர் இணைந்து நடிக்கும் தொடர்ச்சியான மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது