Header Ads


ரஜினி படத்தின் வெளிநாட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ரீம்க்கு விற்ற சன் பிக்சர்ஸ்!

நடிகர் ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட படத்தின் வெளிநாட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சன் பிக்சர்ஸ் விற்றுள்ளது.
நடிகர் ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட படத்தின் வெளிநாட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்நிறுவனத்திற்கு சன் பிக்சர்ஸ் விற்றுள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட. இந்தப் படம் அஜித்தின் ‘விஸ்வாசம் படத்துடன் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகிறது.‘பேட்ட படத்திற்கும் ‘விஸ்வாசம் படத்திற்கும் கடும் போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில் ‘பேட்ட படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கிவிட்டது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் இதற்கு முன்பு ரஜினியின் ‘கபாலி, விஜய்யின் ‘தெறி, விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்கமறு படத்தையும் இந்த நிறுவனம்தான் வாங்கியுள்ளது.

Powered by Blogger.