Header Ads


Kamal Haasan: ரஜினியை விட அதிக சம்பளம் கேட்ட கமல் : விலகி போன ஷங்கர் பட வாய்ப்பு

அக்ஷய்குமார் கேரக்டரில் ‘2.0’ படத்தில் நடிக்க முதலில் நடிகர் கமலிடம் கேட்டபோது, ரஜினியை விட அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது.

அக்ஷய்குமார் கேரக்டரில் ‘2.0’ படத்தில் நடிக்க முதலில் நடிகர் கமலிடம் கேட்டபோது, ரஜினியை விட அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் ‘2.0’. இந்தப் படத்தை மிகப் பிரம்மாண்டமாக ரூ.600 கோடி செலவில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் வில்லனாக அக்ஷய்குமாரும், நாயகியாக எமி ஜாக்சனும் நடித்துள்ளனர். இந்தப் படம் நவம்பர் 29ம் தேதி உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. தற்போது இந்தப் படம் திரையிட்ட இடமெங்கும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. 

இந்நிலையில் முதலில் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் இயக்குனர் ஷங்கர். கதையை கேட்டபின் நடிக்க சம்மதித்த கமல், இப்படத்தில் நான் நடிக்க வேண்டுமானால் ரஜினியின் சம்பளத்தை விட எனக்கு அதிகமாக தர வேண்டும் எனக்கூறினாராம். 

அதன்பின்பே அக்‌ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்‌ஷய்குமாரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. செல்போன்களால் பறவைகள் சாகின்றன எனக்கண்டுபிடித்து, அதை தடுக்க முடியாமல் தற்கொலை செய்து, அதன் பின் அவரின் ஆவி பொதுமக்களை பழிவாங்கும் பக்‌ஷிராஜா கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ரஜினிக்கு இணையாக அவரின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Powered by Blogger.