Header Ads


Viswasam Vettikattu Song: இன்று வெளிவரும் விஸ்வாசம் 2வது சிங்கிள் டிராக் ‘வேட்டிக்கட்டு..’

விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

Highlights

இப்படத்தின் சிங்கிள் டிராக் ‘அடிச்சுத் தூக்கு’ கடந்த 10ம் தேதி வெளியான நிலையில், இதன் இரண்டாவது சிங்கிள் டிராக் ’வேட்டிக்கட்டு’ பாடல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
இயக்குநர் சிவா , அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 

இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைக்கிறார் டி.இமான். விஸ்வாசம் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். தொடர்ந்து படம் குறித்த பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


விஸ்வாசம் பட 'வேட்டிக்கட்டு’ பாடல் இன்று வெளியீடு

அதை தொடர்ந்து விஸ்வாசம் படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘அடிச்சுத் தூக்கு’ கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்டது. அப்பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்தனர். அதை தொடர்ந்து இன்று இந்த படத்தின் இரண்டாவது டிராக் பாடல் மாலை 7 மணிக்கு வெளியிடப்படுகிறது. 
’வேட்டிக்கட்டு’ என்ற பெயரில் வெளிவரும் இப்பாடல், தமிழர்களின் வேட்டிக்கட்டு ஸ்டைலை பறைசாற்றும் விதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகுறது. விஸ்வாசம் படத்தில் அஜித் படம் முழுவதும் வேட்டி மட்டுமே அணிந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



விஸ்வாசம் படத்தின் ‘வேட்டிக்கட்டு’ பாடலை சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரும், பிரபல நாட்டுப்புற இசைக்கலைஞருமான செந்தில் கணேஷ் பாடியுள்ளார். 



Powered by Blogger.