Header Ads


Katrina Kaif: காதல் தோல்வி அடைவது ஒரு வரம்: விரக்தியில் கேத்ரினா

தான் காதலில் தோல்வி அடைந்தது எனக்குக் கிடைத்த வரம் என்று பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப் தெரிவித்துள்ளார். ரன்பிர் கபூரை ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த கேத்ரினா அவரைப் பிரிந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இப்படிச் சொல்கிறார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கேத்ரீனா கைஃப். ஆமீர் கானுடன் இவர் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் படுமொக்கையாக முடிந்துவிட்டது. 

இந்நிலையில் பேட்டி ஒன்றில் தனது காதல் நினைவுகள் பற்றி பேசியுள்ளார் கேத்ரினா. அப்போது, காதலில் தான் தோல்வி அடைந்தது எனக்கு அளிக்கப்பட்ட ஆசிர்வாதம் போன்றது என்று கூறியுள்ளார். 

மேலும், இந்த வரத்தினால் நான் என்னைப் பற்றியே சிந்தித்து புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது எனவும் பிரிந்து சென்றவர்களை முற்றிலும் வேறு கோணத்திலிருந்து பார்க்க முடிகிறது எனவும் தெரிவித்துள்ளார். 
பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும் கேத்ரினாவும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பலமுறை பொது இடங்களில் இருவரும் இணைந்து தங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளனர். 

ஆனால், துரதிஷ்டவசமாக 2016ஆம் ஆண்டு இருவரும் பிரிய நேர்ந்தது. பிரிவுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து கேத்ரினா பிரிவை தனக்குக் கிடைத்த ஆசிர்வாதம் எனக் கூறியிருக்கிறார். கேத்ரினாவைப் பிரிந்த ரன்பிர் கபூர் தற்போது மற்றொரு பாலிவுட் நடிகை அலியா பட் உடன் டேட்டிங் செய்துவருகிறார்! 

Powered by Blogger.